Wednesday, March 31, 2010

தமிழக பட்ஜெட்

இந்த வருட பட்ஜெட் பற்றி ஒரு பார்வை .

கிழே நான் கொடுத்துள்ளது அனைத்தும் சென்ற வாரம் துக்ளக்கில் திரு. N.Murugan I.A.S அவர்கள் எழுதிய கட்டுரை (பயத்தை உண்டாகுகிற பட்ஜெட்) ஆகும்.

போன வருட பட்ஜெட்டில் ரூ 1024 கோடி பற்றாகுறை ஏற்படும் என் கூறப்பட்டது , ஆனால் தற்போது அது சுமார் 5019 கோடி செலவு ஆகி உள்ளது.அதாவது சுமார் 4000 கோடி அதிகம் ஆகி உள்ளது.
இந்த நிதி பற்றாக்குறைஏய் போக்க ரூ 3000 கோடி அதிகமாக கடன் வாங்கப்பட்டுள்ளது.3000 கோடி கடன் வாங்கி சமாளித அரசு மீதியை எப்படி சமாளித்து உள்ளது தெரியுமா? மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் மாநில அரசின் முலதனசெலவைக் (capital expenditure) குறைத்து, செலவிடப்பட்டு, துண்டு விழும் பணம் சரிகட்டபட்டுள்ளது.

* இதன்படி, சாலைகள் போடாமல் ரூ. 400 கோடியும்,

* வீட்டு வசதி துறையில் முதலிடு செய்யவிருந்த பணத்தில் ரூ. 370 கோடியும் ,

* நீர்ப் பாசனத் திட்டங்களில் இருந்து ரூ. 250 கோடியும் ,

* கூட்டுறவு துறையில் ரூ.200 கோடியும்,

* நகர்புற வளர்ச்சிப் பணிகளில் ரூ. 160 கோடியும் செலவு செய்யப்படாமல் ,

மொத்தம் ரூ. 1,380 கோடியை, சென்ற ஆண்டு பட்ஜெட்டில் துண்டு விழும் தொகையில் அட்ஜஸ்ட் செய்துள்ளனர்.

ஏற்கனவே இலவசங்களாலும், பகட்டான செலவினங்களாலும் மாநிலப் பொருளாதாரம் பதிகபட்டிருக்கும் சூழ்நிலையில், கொஞ்சமாவது நடைபெற்று வந்த சாலை பணிகள், நீர்ப்பாசனதிட்டங்கள் போன்றவற்றுக்கு பண ஓதிக்கிடு செய்தும், அதை உபயோகிக்க முடியாதபடி மாநில அரசின் நிதி நிர்வாகம் நடப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

(நன்றி: துக்ளக்)

No comments:

Post a Comment