Friday, August 27, 2010

புலிய பாத்து சூடு


நானும் பதிவு எழுதலாம் என்று "புலிய பாத்து சூடு" போட்ட கதையா ஜாக்கிசேகர் மற்றும் பலரை பார்த்து இந்த ப்ளோக ஆரம்பித்தேன். ஆனா சூடு போட்டுகினது தான் மிச்சம்.ப்ளாக் ஆரம்பித்த உடனே நான் போட்ட முதல் பதிவோட சரி வேற எதையும் புடுங்க முடியல.

அப்பறம் பழையபடி எல்லா ப்லோகயும் மேய ஆரம்பித்து கடைசில நான் ப்ளாக் அரம்பிததேயே மறந்தாச்சி.

ஆனால் எனக்கு ப்ளாக் அறிமுகம் ஆனது இப்படி தான்,

நான் கொஞ்சம் ஆங்கில படம் பார்பதில் ஆர்வம் உள்ளவன், அப்படி தான் ஒருமுறை ஆபீஸ்ல போன வருடம் வெடியா ஒகர்ந்திருந்த போது ஹாலிவுட் பாலா வின் பதிவை படிக்கச் நேர்ந்தது.அந்த ப்ளாக் முலமாக தான் நான் பல பதிவர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது.

என்னை ரொம்ப இம்ப்ரெஸ் செய்தவர் திரு.ஜாக்கிசேகர். அவர் பதிவுகள் தான் காரணம், அதில் உள்ள எளிமை. மேலும் தருமி அய்யா அவர்களின் பல பதிவுகள் மதங்களின் உண்மை நிலையை காட்டின.

மேலும் இந்த பதிவு உலகத்தில் என்னை சங்கடபடுத்திய ஒரு விஷயம் என்னன்னா சில மாதங்களுக்கு முன்பு தோன்றிய சில கசப்பான விஷயம் தான்.இந்த பதிவு உலகத்தில் கூட சாதி, மத, அரசியல் சண்டைகள் உருவானதுதான்.

இப்போ ரொம்பநாள் கழிச்சி ப்ளாக் ஞாபகம் வந்த உடன் என்ன எழுதறதுன்னு தெரியல அதனால, பேசாம நமக்கு ப்ளாக் எப்படி அறிமுகம் ஆச்சின்னு எழுதலாம்னு , என்னோட ரெண்டாவது பதிவ போடுகிறேன்.

இந்த பதிவு எப்பவும் போல நேர்த்தியாக இருக்காது,என்ன இப்பதானே ஆரம்பிச்சுருக்கேன். போக போக சரி பண்ணிடலாம்னு நம்பிக்கை இருக்கு.

Wednesday, March 31, 2010

தமிழக பட்ஜெட்

இந்த வருட பட்ஜெட் பற்றி ஒரு பார்வை .

கிழே நான் கொடுத்துள்ளது அனைத்தும் சென்ற வாரம் துக்ளக்கில் திரு. N.Murugan I.A.S அவர்கள் எழுதிய கட்டுரை (பயத்தை உண்டாகுகிற பட்ஜெட்) ஆகும்.

போன வருட பட்ஜெட்டில் ரூ 1024 கோடி பற்றாகுறை ஏற்படும் என் கூறப்பட்டது , ஆனால் தற்போது அது சுமார் 5019 கோடி செலவு ஆகி உள்ளது.அதாவது சுமார் 4000 கோடி அதிகம் ஆகி உள்ளது.
இந்த நிதி பற்றாக்குறைஏய் போக்க ரூ 3000 கோடி அதிகமாக கடன் வாங்கப்பட்டுள்ளது.3000 கோடி கடன் வாங்கி சமாளித அரசு மீதியை எப்படி சமாளித்து உள்ளது தெரியுமா? மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் மாநில அரசின் முலதனசெலவைக் (capital expenditure) குறைத்து, செலவிடப்பட்டு, துண்டு விழும் பணம் சரிகட்டபட்டுள்ளது.

* இதன்படி, சாலைகள் போடாமல் ரூ. 400 கோடியும்,

* வீட்டு வசதி துறையில் முதலிடு செய்யவிருந்த பணத்தில் ரூ. 370 கோடியும் ,

* நீர்ப் பாசனத் திட்டங்களில் இருந்து ரூ. 250 கோடியும் ,

* கூட்டுறவு துறையில் ரூ.200 கோடியும்,

* நகர்புற வளர்ச்சிப் பணிகளில் ரூ. 160 கோடியும் செலவு செய்யப்படாமல் ,

மொத்தம் ரூ. 1,380 கோடியை, சென்ற ஆண்டு பட்ஜெட்டில் துண்டு விழும் தொகையில் அட்ஜஸ்ட் செய்துள்ளனர்.

ஏற்கனவே இலவசங்களாலும், பகட்டான செலவினங்களாலும் மாநிலப் பொருளாதாரம் பதிகபட்டிருக்கும் சூழ்நிலையில், கொஞ்சமாவது நடைபெற்று வந்த சாலை பணிகள், நீர்ப்பாசனதிட்டங்கள் போன்றவற்றுக்கு பண ஓதிக்கிடு செய்தும், அதை உபயோகிக்க முடியாதபடி மாநில அரசின் நிதி நிர்வாகம் நடப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

(நன்றி: துக்ளக்)